Latest News

விநாயகர் சதுர்த்தி விழா: 257 சிலைகள் பிரதிஷ்டை

உடுமலையில், இந்து முன்னணி சார்பில், 257 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், இந்து முன்னணி சார்பில், 257 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்படுகிறது. தினமும் சிறப்பு பூஜைகள், கலாசார, பாரம்பரிய விளையாட்டு போட்டிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நடக்கிறது.3ம் தேதி, உடுமலை மேற்கு ஒன்றியத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம், பொதுக்கூட்டம், எரிசனம்பட்டியில் நடக்கிறது. 4ம் தேதி, காலை, 10:00க்கு, குடிமங்கலம், மடத்துக்குளம், கொமரலிங்கம் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள், விசர்ஜன ஊர்வலம், அந்தந்த பகுதிகளில் நடக்கிறது.மதியம், 2:00 மணிக்கு, உடுமலை நகரபகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் ஊர்வலம், பொதுக்கூட்டம் நேதாஜி மைதானத்தில் நடக்கிறது, என இந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.