Latest News

பள்ளி மாணவர்களின் வண்ணத்திருவிழா

மாணவர்கள் பங்கேற்ற வண்ணத் திருவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.உடுமலை பெதப்பம்பட்டி ஆர்.ஜி.எம்., மேல்நிலைப்பள்ளியில், எல்.கே.ஜி., முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்ற வண்ணத்திருவிழா நடந்தது.மேலும், ஒன்பது முதல், பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் வரை பங்கேற்ற உணவு திருவிழாவும் நடந்தது. இதில், மாணவர்கள், இளஞ்சிவப்பு, சிவப்பு, மஞ்சள், பச்சை நிறங்களில் ஆடைகள் அணிந்து வந்தனர். மாணவர்கள் பல்வேறு வண்ண ஆடைகளில் வந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.